அறிமுகம்
தேசிய அறிவுசார் ஆணையத்தின் முடிவுகளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, இந்திய குடிமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான செய்திகளை வழங்குவதற்காகவும், சுகாதாரம் பற்றிய அனைத்து செய்தித் தொகுப்புகளையும் ஒரே இடத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு வசதியாகவும், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய சுகாதார இணைய தளத்தை அமைத்துள்ளது. தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநல நிறுவனம் (NIHFW), தேசிய சுகாதார இணைய தளத்தை நிர்வகிக்கும் செயலகமாக சுகாதாரத் தகவல் மையத்தை (CHI) அமைத்துள்ளது
இலக்கு
அனைவருக்குமான ஆதார பூர்வமான சுகாதாரத் தகவல் நுழைவாயில்.
நோக்கம்
பொதுமக்கள், மாணவர்கள், மருத்துவத் தொழில் சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள் ஆகிய அனைவரும் சுகாதாரம் பற்றிய ஆதார பூர்வமான செய்திகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தேசிய சுகாதார இணையதளத்தின் நோக்கமாகும்.
திட்டப்பணி
இந்தியக் குடி மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் சேவைகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, சரிபார்த்து, பரப்பும் தனது நோக்கத்தை தேசிய சுகாதார இணையதளம் நிறைவேற்றும்.