Jaundice.png

மஞ்சள்காமாலை

தோலும் வெண்விழிப்படலமும் மஞ்சளாக மாறுவதை விளக்க மஞ்சள் காமாலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரல் நோய்களான கல்லீரல் அழற்சி அல்லது கல்லீரல் புற்றுநோய் தாக்கும்போது மஞ்சள் காமாலை உண்டாவதைக் காணலாம். பித்தநீர்க் குழாய் தடைபடுவதை இது உணர்த்துகிறது: உதாரணமாக, பித்தப்பை கற்கள் அல்லது கணையப்புற்று உண்டாகும்போது. அரிவாளணு இரத்தச் சோகை, கில்பர்ட் நோய் அல்லது கரணைநோய் போன்ற கோளாறுகளால் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் போதும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

இரத்தம் சிவப்பணுக்களில் உள்ள இரத்தப் புரதத்தால் ஆனது. சிவப்பணுக்கள் ஏறக்குறைய 120 நாட்களே நிலைத்திருக்கும். பின் அவை மெல்லியதாகி மண்ணீரலில் உடைக்கப்படுகிறது. நாட்பட்ட இரத்தப்புரதத்தில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களில் பித்தச் செம்பசையும் அடங்கும். இது கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்படும். அங்கு பல உயிர் வேதியல் செயல்பாடுகளுக்குப் பின் பித்த நீராக வெளியேற்றப்படும். பல முறைகளில் உருவாக்கம் நடைபெறுகிறது:

  • சீக்கிரமாகவே சிவப்பணுக்கள் உடைந்தால் மண்ணீரலுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதனால் உண்டாகும் அதிகப்படியான பித்தச்செம்பசையைக் கல்லீரல் கையாள வேண்டியிருக்கும். வெளியேற்றப்படாத பித்தச்செம்பசை இரத்த ஓட்டத்தில் அதிகரிப்பதால் தோலும் கண்களும் மஞ்சளாகத் தெரிகின்றன. இந்நிலை சிவப்பணு இரத்தச்சோகை எனப்படும். இது பரம்பரையாக சிலவேளைகளில் ஏற்படலாம். சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் உண்டாகலாம்.
  • சிலசமயங்களில் பிரச்சினை கல்லீரல் உயிரணுக்களிலும் இருக்கும். தவறான உள்ளெடுப்பு, நிகழ்முறை அல்லது வெளியேற்றத்தால் பித்தச் செம்பசையின் அளவு இரத்த ஓட்டத்தில் அதிகரிக்கும். பித்தச்செம்பசையைக் கையாளத் தேவையான தகுந்த அளவு நொதிகள் இல்லாத காரணத்தால் பிறந்த குழந்தைகளுக்குத் தற்காலிக மஞ்சள் காமாலை உண்டாகலாம். பெரியவர்களுக்கு மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவது பரவலான காரணமாகும். சில நச்சுப் பொருட்களும் ஒரு சில மருந்துகளும் கடுமையான பாதிப்பைக் கல்லீரலுக்கு ஏற்படுத்தக்கூடும்.
  • பித்த நீர்க் குழாய்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாகப் பதப்படுத்தப்பட்ட பித்தச்செம்பசை திரளும். இது சிறுநீரில் கலப்பதால் அது அடர்ந்த நிறத்தில் காணப்படும். பித்தப்பை கற்களால் பரவலாக அடைப்பு ஏற்படுகிறது.

குறிப்புகள் : www.nhs.uk
                        www.cdc.gov
                        www.nlm.nih.gov
                        www.nevdgp.org

மஞ்சள் காமாலையின் முக்கிய நோயறிகுறிகள் வருமாறு:

  • கண்களும் தோலும் மஞ்சளாதல்
  • வெளிறிய நிறத்தில் மலம்
  • சிறுநீர் அடர்ந்த நிறமாதல்

உடல் அமைப்பில் எங்கு நோய் பாதிக்கிறது என்னும் அடிப்படையில் மஞ்சள் காமாலை மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது. அவையாவன:

முன்கல்லீரல் மஞ்சள்காமாலை (Pre hepatic): சிவப்பணுக்கள் அதிக அளவில் உடைவதே இதற்குரிய காரணம். சிவப்பணு உடையும் காரணங்களில் அடங்குவன:

  • மலேரியா
  • அரிவாளணு இரத்தச்சோகை
  • தலசீமியா
  • கில்பர்ட் நோய்

கல்லீரல் உயிரணு சார்ந்தது (Hepato cellular): கல்லீரலில் உண்டாகும் எந்த ஒரு தொற்றாலும் இது உண்டாகலாம். தொற்று அல்லது மது போன்ற ஒரு தீங்கு விளைவிக்கும் பொருளால் பித்தச்செம்பசையைக் கையாளும் கல்லீரலின் திறன் தடைபடுவதாலும் ஏற்படலாம்.

பின் கல்லீரல் மஞ்சள் காமாலை (Post hepatic jaundice): இது தடைபடுத்தும் காமாலை என்றும் அழைக்கப்படும். பித்தநீர் மண்டலத்தில் பித்த நீர் பாய்வது தடைபடுவதால் இது ஏற்படுகிறது. இதன் பொதுவான காரணம் பொது பித்தநீர்க் குழாயில் பித்தப்பை கல் அடைப்பதால் அல்லது கணையப் புற்றுநோயால் உண்டாகிறது. மஞ்சள் காமாலைக்குக் காரணமான சில அடிப்படையான காரணிகள்:

  • கடுமையான கல்லீரல் அழற்சி — பித்தச்செம்பசையைக் கையாள இயலாதவாறு கல்லீரல் செயல் இழக்கும்போது பித்தச்செம்பசையின் அளவு அதிகரிக்கிறது.
  • பித்தநீர்க்குழாய் அழற்சி — பித்த நீர்ச் சுரப்பதையும் பித்தச்செம்பசை வெளியேற்றப்படுவதையும் தடுத்து மஞ்சள் காமாலையை உண்டாக்கும்.
  • பித்தநீர்க் குழாயில் அடைப்பு — கல்லீரல் பித்தச்செம்பசையை வெளியேற்ற முடியாமல் தடை ஏற்படுவதால் அதிகரித்தல்.
  • சிவப்பணு சிதைவு இரத்தச்சோகை — சிவப்பணுக்கள் பெருமளவில் சிதைவதால் பித்தச்செம்பசையின் உற்பத்தி அதிகரிக்கிறது.
  • கில்பர்ட் நோய் — பித்த நீரை வெளியேற்றும் நொதிகளின் செயல்பாட்டைத் தடுக்கும் ஒரு பரம்பரைத் தன்மை.
  • பித்தநீர் அடைப்பு — கல்லீரலில் இருந்து பித்தநீர் வெளியேறுவது தடைபடும் நிலை. பித்தசெம்பசையை இணைப்பியாகக் கொண்ட பித்தநீர் வெளியேறாமல் கல்லீரலிலேயே தங்கிவிடுதல்.

குறிப்பு : www.nhs.uk
                 www.cdc.gov

சிறுநீர்ச்சோதனை: செரிமான மண்டலத்தில் பித்தச்செம்பசை பாக்டீரியாக்களால் உடைக்கப்படும்போது யூரோபிலினோஜன் உண்டாக்கப்படுகிறது. இதன் அளவு கண்டறியப்படுகிறது.

இரத்தப்பரிசோதனை: பின்வருபவை கண்டறியப்படுகின்றன: முக்கியமாகக் கல்லீரலில் இருந்து உண்டாகும் அமினோடிரான்ஸ்ஃபெரேசுகள் (ALT, AST), அல்கலைன் பாஸ்ஃபேட்டேஸ் (ALP) போன்ற நொதிகள், பித்தசெம்பசை (பிலிருபின்-மஞ்சள் காமாலையை உண்டாக்குவது), புரத அளவுகள், குறிப்பாக, மொத்த புரதம் மற்றும் அல்புமின்.

கல்லீரல் செயல்பாடு குறித்த பிற முக்கிய ஆய்வகச் சோதனைகளில் அடங்குபவை: காமா குளூட்டமைல் டிரான்ஸ்பெப்டிடேஸ் (GGT), புரோத்ராம்பின் டைம் (PT).

தேசிய சுகாதார இணையம் ஆரோக்கியத்தைப் பற்றி சிறந்த முறையில் புரிந்துகொள்ள  குறிப்பான செய்திகளைத் தருகிறது. எந்த ஒரு நோயையும் கண்டறிந்து மருத்துவம் செய்துகொள்ள நீங்கள் உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.

குறிப்புகள் : www.nhs.uk
                        www.cdc.gov

நோயோடு சம்பந்தப்பட்டுள்ள ஆபத்து காரணிகளையும், காரணங்களையும் தடுப்பது மூலம் மஞ்சள் காமாலையைத் தடுக்க முடியும்:

  • அளவோடு மது அருந்துதல்
  • ஆரோக்கியத்திற்கு ஏற்ற அளவில் எடையைப் பேணுதல்
  • கல்லிரல் அழற்சி நோய் B , C யின் அபாயத்தைக் குறைத்தல்

குறிப்பு: www.cdc.gov

மஞ்சள் காமாலைக்கு என்று மருத்துவம் இல்லை. அறிகுறிகளையும் காரணங்களையும் கட்டுப்படுத்தியே நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முன் கல்லீரல் மஞ்சள் காமாலை(Pre-hepatic jaundice):

இதற்கு சிகிச்சை அளிக்கும்போது பித்தச்செம்பசையின் அளவை இரத்தத்தில் கூடச்செய்யும் சிவப்பணுவின் விரைவான சிதைவைத் தடுப்பதே நோக்கம்.

மலேரியா போன்ற தொற்றுக்கள் இருந்தால் அடிப்படையாக இருக்கும் நோய்களுக்கு மருந்து அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

அரிவாளணு இரத்தச்சோகை, தலசீமியா போன்ற மரபணு இரத்தக்கோளாறுகள் இருந்தால், சிவப்பணுக்களை மாற்றம் செய்ய இரத்த மாற்று சிகிச்சை தேவைப்படும்.

கில்பர்ட் நோயோடு சேர்ந்து வரும் மஞ்சள் காமாலை கடுமையானது அல்ல. இது உடல்நலத்திற்குப் பெருங்கேடுகள் எதுவும் விளைவிப்பதில்லை. எனவே இதற்கு சிகிச்சை எதுவும் தேவைப்படுவதில்லை.

உட்கல்லீரல் மஞ்சள் காமாலை (Intra-hepatic jaundice)

இவ்வகை மஞ்சள் காமலையில் கல்லீரல் சிதைவைச் சரிசெய்யவதற்கு ஒன்றுமில்லை. கல்லீரலே நாள் செல்லச் செல்ல தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது. அதனால் மேலும் கல்லீரல் சிதைவு ஏற்படாமல் பாதுகாப்பதே நோக்கம்.

வைரல் கல்லீரல் அழற்சி அல்லது சுரப்பிக் காய்ச்சல் போன்ற தொற்றால் கல்லீரல் சிதைவு ஏற்பட்டிருந்தால் மேலும் சிதைவு ஏற்படாமல் தடுக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மது அல்லது வேதியற் பொருட்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் சிதைவு ஏற்பட்டு இருந்தால் மேலும் அப்பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.

கடுமையான கல்லீரல் நோயிருந்தால் கல்லீரல் மாற்று சிகிச்சையே சிறந்த வழி.

பின் கல்லீரல் மஞ்சள் காமாலை (Post Hepatic Jaundice)

பெரும்பாலான நோயாளிகளுக்குப் பித்தக் குழாய் மண்டலத்தில் உள்ள அடைப்புகளை அகற்ற அறுவை மருத்துவம் தேவைப்படும்.

  • பித்தப்பை
  • பித்தநீர் குழாய் மண்டலத்தில் ஒரு பகுதி
  • மேலும் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கக் கணையத்தின் ஒரு பகுதி

ஆகியவற்றை அகற்ற வேண்டிய தேவை ஏற்படலாம்.

தேசிய சுகாதார இணைய தளம் ஆரோக்கியத்தைப் பற்றி சிறந்த முறையில் புரிந்து கொள்ளக்      குறிப்பான தகவல்களைத் தருகின்றது. நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

குறிப்பு :  www.nhs.uk

  • PUBLISHED DATE : May 19, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP CC DC
  • LAST UPDATED ON : Jul 08, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.