Swine-flu.png

பன்றிக்காய்ச்சல்

பனறிக்காய்ச்சல், பன்றி இன்ஃபுளுயன்சா அல்லது பரவல்தொற்று இன்ஃபுளுயன்சா என்றும் அழைக்கப்படும். இது ஒரு சுவாச நோயாகும். H1N1 வைரஸ் இதை உண்டாக்குகிறது (2009-ல் முதன்முதல் பரவியது). இந்த வைரஸ், முதலில் பன்றியின் மூச்சுக்குழாயைத் தாக்கிப் பின் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதனால் மூக்கொழுகுதல், இருமல், பசியின்மை, அமைதியின்மை ஆகியவை உண்டாகும்.

இன்ஃபுளுயன்சா காய்ச்சலின் ஒரு புதிய திரிபே பன்றிக்காய்ச்சல். இது 2009-2010-ல் தொற்று நோயாகப் பரவியது. பன்றிக்காய்ச்சல் வைரஸ் பிறழ்ச்சி அடையக் கூடியது. எனவே அவை எளிதாக மனிதர்களுக்கும் தொற்றுகிறது.

ஆகஸ்ட் 10, 2010-ல் உலக சுகாதார நிறுவனம் பன்றிக்காய்ச்சல் தொற்றுப் பரவல் முடிந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் பன்றிக்காய்ச்சல் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று கருத முடியாது. தொற்றுப் பரவலை உண்டாக்கிய H1N1 வைரஸ் தற்போது எப்போதுமுள்ள சளிக்காய்ச்சல் வைரசாக உலகம் எங்கும் காலங்களுக்கு ஏற்ப வெளிப்பட்டுச் சுற்றித் திரிகிறது.

References:www.ima-india.org

மேற்கண்ட உள்ளடக்கம் நோய்க்கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் டாக்டர். பிரதிப் கஸ்னோபிசால் 21 செப்டம்பர் 2014 அன்று மதிப்பிடப்பட்டது.

அண்மைக்கால மேம்படுத்தல்கள்

பன்றிக்காய்ச்சல் (H1N1) தொலைபேசி உதவி எண்: 011-23921401

பன்றிக்காய்ச்சலின் நோயரும்பும் காலம் 1-4 நாட்கள் ஆகும். இதனுடைய அறிகுறிகள் சளிக்காய்ச்சல் (ஃபுளு) அறிகுறி போன்றதே. அவற்றில் அடங்குவன:

 • காய்ச்சல்
 • தலைவலி
 • மூக்கொழுகுதல்
 • தொண்டைவலி
 • மூச்சடைப்பு அல்லது இருமல்
 • பசியின்மை
 • வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி

குறிப்பு : www.nhs.uk

பன்றிக்காய்ச்சல் H1N1 வைரசால் ஏற்படுகிறது. இது முதலில் பன்றியின் மூச்சுக்குழலைப் பாதித்துப் பின் மனிதர்களுக்குப் பரப்பப்படுகிறது. இதனால் மூக்கொழுகுதல், இருமல், பசியின்மை, அமைதியின்மை ஆகியவை உண்டாகும்.

ஆறு அடி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கும் பன்றிக்காய்ச்சல் பரவலாம். காய்ச்சல் இருக்கும் ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும், பேசும்போதும் வெளிப்படும் துளிகள் மூலம் வைரஸ் பரவும். அருகில் இருப்போரின் வாய் அல்லது மூக்கில் துளிகள் பட்டு அவை உள்ளிழுக்கப்பட்டு நுரையீரலுக்குச் செல்லும். வைரஸ் இருக்கும் பரப்பைத் தொடுவதன் மூலமும் சில வேளை பரவலாம்.

குறிப்பு : www.cdc.gov

நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளைக் கொண்டு பன்றிக்காய்ச்சல் கண்டறியப்படுகிறது. RT-PCR  (மறிநிலை படியெடுப்பு பாலிமெரேஸ் தொடர் வினை) என்ற ஒரு நுட்பத்தைக் கொண்டு ஆய்வகத்தில் மேலும் உறுதி செய்யப்படுகிறது.

சனாமிவிர் (ரெலென்சா), ஒசல்டாமிவிர் (தமிஃபுளு) போன்ற எதிர் வைரஸ் மருந்துகளால் பன்றிக்காய்ச்சலின் விளைவுகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு மருந்துகளும் இன்ஃபுளுயன்சா A மற்றும் B-யின் அறிகுறிகளைத் தடுக்கும் அல்லது குறைக்கும்.
இவற்றை மருத்துவரின் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாது. வைரசின் எதிர்ப்பால் இம்மருந்துகள் பலனின்றி போகக் கூடும்.

குறிப்பு : www.nhs.uk

சிறந்த சுகாதாரத்தைப் பேணுவதின் மூலமே இந்தத் தொற்றை தடுக்க முடியும். இன்ஃபுளுயன்சா தடுப்புமருந்தை உட்கொள்ளுவதும் பலனளிக்கும்.

தடுப்புமுறைக் குறிப்புகள்:

 1. அடிக்கடி கைகழுவுதல்
 2. முகத்தின் எந்தப் பகுதியையும் கைகளால் தொடக் கூடாது.
 3. வெதுவெதுப்பான உப்புநீரால் தினமும் இருமுறை கொப்புளிக்கவும். (H1N1 வைரஸ் முதலில் தொண்டை/மூக்குப்பாதையைப் பாதித்துப் பின் அறிகுறிகளை வெளிக்காட்ட 2-3 நாட்கள் ஆகும்)
 4. மூக்குப் பாதையைத் தினமும் ஒருமுறையாவது வெதுவெதுப்பான உப்பு நீரால் கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை வேகமாக மூக்கைச் சீந்தி, உப்பு நீரில் நனைத்தப் பஞ்சு மொட்டுகளால் சுத்தம் செய்வதால் வைரஸ் அடர்த்தி குறைவடையும்.
 5. உயிர்ச்சத்து C (நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை வகைப் பழங்கள்) அடங்கிய உணவால் தடுப்பு மண்டலத்தைப் பலப்படுத்துதல்.
 6. சூடான பானங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்தல் (தேனீர், காப்பி போன்றவை). சூடான பானங்களைக் குடிப்பது கொப்புளிப்பது போன்று பலனளிப்பதே (எதிர்த்திசையில்). அவை வைரசுகளை வயிற்றுக்குள் அடித்துச் செல்லும். அங்கு அவற்றால் உயிர்பிழைக்கவோ, ஊடுறுவவோ அல்லது தீங்கிழைக்கவோ முடியாது.

குறிப்பு : www.nhs.uk 
www.vaccineindia.org

 • PUBLISHED DATE : May 19, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Oct 09, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.